பிறந்தநாள் கொண்டாட்டத்தில் டாஸ்மாக் பாரில் கோஷ்டி மோதல் - 3 பேர் காயம்

கோவை, டிச. 25: கோவை சுங்கம் பைபாஸ் சிவராம் நகரில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மதுப்பிரியர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவரின் பிறந்தநாளை 5க்கும் மேற்பட்டவர்கள் பாரில் மது அருந்தி கொண்டாடினர். அவர்கள் ஸ்பிரே அடித்து ஆரவாரம் செய்தனர். இதில், ஸ்பிரே நுரை பக்கத்து டேபிளில் மது அருந்தி கொண்டிருந்தவர்கள் மீது பட்டது. இது தொடர்பாக, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.  இருதரப்பில் ஒருவருக்கொருவர் பாட்டிலால் தாக்கி கொண்டனர். இந்த கோஷ்டி மோதலில் கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பிரகாஷ் (21) மற்றும் அவரது நண்பர் பிரபுவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

மற்றொரு தரப்பில் இப்ராஹிம் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இது குறித்து இருதரப்பினர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: