அந்தியூரில் எம்ஜிஆர் நினைவுநாள் அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி

அந்தியூர், டிச.25:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் எதிரில் எம்ஜிஆரின் 34வது நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது.  இதில், நகர அதிமுக சார்பில் எம்ஜிஆரின் உருவ படத்திற்கு  மாலை அணிவித்து, மலர் தூவி நினைவுஅஞ்சலி செலுத்தினர். அதிமுக நகர செயலாளர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் தேர்வீதி, அரசு மருத்துவமனை பிரிவு உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவுநாள் அஞ்சலி செலுத்தினர்.இதில், ஒன்றிய துணை செயலாளர் சண்முகானந்தம், மேற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் குருராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலுச்சாமி ஹோட்டல் கிருஷ்ணன், நெசவாளர் அணி ராஜா சம்பத், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் சின்னத்தம்பி நாயுடு உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Related Stories: