கிறிஸ்துமஸ் கோலாகலம்

ஈரோடு, டிச. 25: ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. விழாவை 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவிகள் ஒருங்கிணைத்தனர். விழாவில் இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்த நிகழ்வுகளை, பேச்சு, நடனம், பாட்டு, நாடகம் போன்றவைகளை மூலமாக மாணவிகள் விளக்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி, மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை கோகிலவாணி, உயர்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை மோகனப்பிரியா மற்றும் அனைத்து ஆசிரியைகள்,  மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: