×

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்

திருவள்ளூர், டிச.25: திருவள்ளுரில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு அனைவரையும் வரவேற்றார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, `திருவள்ளுர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் துறையின் கீழ் மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,13,660 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 7,213 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,54,57,000 உதவித்தொகை, 1,288 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை அட்டைகள், தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பாக 1,109 பயனாளிகளுக்கு ரூ.1,18,86,981 மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை கட்டுவதற்கான தலா ரூ.35,000 வீதம் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,75,000 மதிப்பீட்டிலான பணி ஆணைகளும் வழங்கப்படுகிறது. இதனை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம்’  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Minister ,Nasser ,
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...