இல்லம் தேடி கல்வி கலைக் குழுவினருக்கு ஏகேஎஸ் விஜயன் பாராட்டு

மன்னார்குடி, டிச.25: இல்லம் தேடிக் கல்வி கலைக் குழுவினர்களை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் தனது இல்லத்திற்கு வரவழைத்து சால்வை அணிவித்து கவுரவப்படுத்தி பாராட்டினார். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழகம் எங்கும் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சிகளானது 2 பொது இடங்கள் 2 பள்ளிக் கூடங் கள் என நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு ஒவ்வொரு ஒன்றியங்களிலும் நடைபெற்று வருகிறது.

நேற்று, கோட்டூர் ஒன்றியத்தில் கிளார்வெளி, நொச்சியூர் சமத்துவபுரம், சித்தமல்லி ஆகிய பகுதிகளில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கபாபு வழிகாட்டுதலுடன் நடைபெற்றது.தனலட்சுமி தலைமையிலான கலைக்குழுவினர்களை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் சித்தமல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து, தமிழக முதல்வரின் சிந்தையில் உதித்த முத்தான திட்டம்தான் இல்லம் தேடிக் கல்வித் திட்டம். மக்கள் மத்தியில் இந்த திட்டத்தை கொண்டு சென்று, தன்னார்வலர்களை இணைக்கும் பணியினை திருவாரூர் மாவட்டம் சிறப்பாக செய்து வருகிறது. திருவாரூர் மாவட்ட கல்வித் துறைக்கும், கலைஞர்களான உங்களுக்கும் எனது வாழ்த்துகள் எனக் கூறி ஒவ்வொரு கலைஞருக்கும் சால்வை அணிவித்து கவுரவித்து பாராட்டினார்.

Related Stories: