பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

தஞ்சை, டிச.25: தஞ்சையில் பெரியார் நினைவு தின நிகழ்ச்சி பல்வேறு அமைப்புகள் சார்பில் அனுசரிக்கப்பட்டது. தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. திமுக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், மாநகர செயலாளர் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் துணை தலைவர் வக்கீல் அன்பரசன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியார் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் மாநகர செயலாளர் முத்துக்குமரன், மாவட்டக்குழு உறுப்பினர் சேவையா, செந்தில்நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: