×

விராலிமலை முருகன் மலைக்கோவிலில் கல்லூரி மாணவர்கள் உழவாரப்பணி

விராலிமலை, டிச. 25: விராலிமலை முருகன் மலைக்கோயிலில் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) உழவாரப் பணி மேற்கொண்டனர். விராலிமலை முருகன் மலைக்கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலத்தில் மலைமேல் உள்ள முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிப்பது இக்கோயிலில் தனி சிறப்பு என்றால் தேசிய பறவையான மயில்கள் இம்மலையில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது மேலும் சிறப்பாகும். இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி வழிபாடு நடத்தி செல்வது வழக்கமாகும்.

இந்நிலையில் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருந்ததால் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் இங்கு நடைபெறுவதில்லை மேலும் அவ்வப்போது வரும் பக்தர்கள் தேவையில்லாத பொருட்களை மலைப்பகுதியில் வீசி செல்வதால் குப்பை கூளங்கள் மண்டிக்கிடந்தது. இதனையடுத்து இக்கோயிலில் உழவாரப்பணி மேற்கொள்ள தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் முடிவு செய்து நேற்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கோயில் மேலே செல்லும் தார் சாலை, யானையடி பாதை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றினர்.

Tags : Viralimalai Murugan Hill Temple ,
× RELATED விராலிமலை முருகன் மலைக்கோயில்...