தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்

பெரம்பலூர்,டிச.25: தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி பெரம்பலூரில் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி பெரம்பலூரில் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக பழைய பஸ் ஸ்டாண்டு, என்எஸ்பி ரோடு, போஸ்ட் ஆபீஸ் தெரு, பள்ளிவாசல் தெரு பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

அதில் நுகர்வோர் பற்றிய குறைகளையும் உரிமைகளையும் பெற அந்தந்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகி உடனடியாக நிவாரணம் பெறலாம். நுகர்வோர் தங்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் தொடர்பாக புகார்களை தெரிவிக்க, சென்னை எழிலகத்தில் உள்ள தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையரிடம் புகார் தெரிவிக்க 044 - 28583222 மற்றும் 28583422 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள 044-22 8592828 என்ற எண்ணில், ஏமாற்றுபவர் விபரங்களை பற்றியும் புகார் தெரிவிக்கலாம்.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாத்து கொள்ளவே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1860ம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பெரம்பலூர் மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட செயலாளர் ரமேஷ் மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பொதுமக்களிடமும் பஸ் பயணிகளிடமும் விநியோகித்தனர்.

Related Stories: