×

தரங்கம்பாடி பகுதியில்

தரங்கம்பாடி, டிச.25:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் பாரம்பாpய நெல் வகையான கருப்புகவுனி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தரங்கம்பாடி பகுதியில் காழியப்பநல்லூர், என்.என்.சாவடி, ஆனைமட்டம், மாமாகுடி, உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரிய நெல் வகையான கருப்புகவுனி சாகுபடியை இயற்கை உரங்கள் கொண்டு விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்த நெல் மழை காலத்திலும் வெள்ளத்திலும் பாதிக்காமல் இருக்கும் வகையில் 6 அடி உயரத்திற்கு வளரக் கூடியது. இச்சாகுபடி குறித்து விவசாயி பழனியப்பன் கூறியதாவது: கருப்புகவுனி நெல் ரகம், பாரம்பரிய நெல் ரகமாகும். இதற்கான விதையை நெல் ஜெயராமனிடம் இருந்து பெற்று வந்தேன். நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்துள்ளேன். இந்த நெற்கதிர்கள் 6 அடி உயரம் வரை வளரும். அதனால் மழையிலோ வெள்ளத்திலோ பாதிப்பு ஏற்படாது. இதனுடைய வயது 150 நாட்கள். இதன் விலை மற்ற நெல்களை விட இருமடங்கு அதிகமாகும். அதாவது இது அதிக லாபத்தை கொடுக்கும் என்று கூறினார்.

Tags : Tharangambadi ,
× RELATED பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31...