தேசிய சித்த மருத்துவ தினவிழா

காரைக்கால், டிச.25: காரைக்காலில் உள்ள ஆயுஷ் மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில், அகத்தியரின் பிறந்த தினமான மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு ‘தேசிய சித்த மருத்துவ திருநாள்’ கொண்டாடப்பட்டது. இதையொட்டி சித்தர் வழிபாடு, சித்த மருத்துவ ஆலோசனை, வர்ம சிகிச்சை மற்றும் பாரம்பரிய உணவு கண்காட்சியும், இலவச முகக்கவசம், இலவச மருந்துகள் மற்றும் பாரம்பரிய உணவு வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அலுவலர் தியாகராஜன் பேசும்பொழுது, சித்த மருத்துவப் பிரிவின் மூலம் காரைக்காலின் அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், சிகிச்சை தேவைப்படுபவர்கள் மருத்துவமனைக்கோ அல்லது சிறப்பு முகாம்களுக்கோ வருகை தந்து சிகிச்சை பெற்று பயனடையலாம் என்றும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சித்தா மருந்தாளுனர் முத்தழகி செய்திருந்தார்.

Related Stories: