சீர்காழி அருகே முன்விரோதத்தில் கத்தியால் குத்தியதில் காயமடைந்த டிரைவர் சாவு

சீர்காழி, டிச.25:  சீர்காழி அருகே சோழசக்கரநல்லூர் பணம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (30). வேன் டிரைவர். இவருக்கும் நத்தம் பகுதியைச் சேர்ந்த அஜீத் (27) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சோழசக்கர நல்லூர் கடைவீதியில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாய்த்தகராறு தள்ளுமுள்ளாக மாறியது. பின்னர் இருவரையும் அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 1ந் தேதி மாலை நத்தம் வந்த பிரவீனை பார்த்த அஜித் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரவீன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பிரவீன் நேற்று இறந்தார். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீத், சேந்தங்குடி பிரகாஷ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: