க.பரமத்தியில் பட்டா பிரச்னைக்கு தீர்வு காண சிறப்பு முகாம்

க.பரமத்தி, டிச. 25: க.பரமத்தியில் நடந்த பட்டா பிரச்னைக்கு தீர்வு காணும் சிறப்பு முகாமில் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு அதன் சான்றிதழ்களை உரியவர்களிடம் அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ வழங்கினார். க.பரமத்தி ஒன்றியம் க.பரமத்தி ஊராட்சி பகுதி மக்களுக்கான வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே நடைபெற்றது. விஏஓ உஷாராணி வரவேற்றார். புகழூர் தாசில்தார் மதிவாணன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் பூபதி, மண்டல துணை தாசில்தார் அன்பழகன், ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை சம்பந்தமாக மனுக்கள் பெற்று முகாமை தொடங்கி வைத்ததுடன். உரிய மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட சான்றிதழ்களை உரியவர்களிடம் வழங்கினார். மீதமுள்ள மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.நிறைவில் ஆர்ஐ முருகேசன் நன்றி கூறினார்.

Related Stories: