செங்கம் தாலுகா அலுவலகத்தில் பழங்குடியினர் வாழ்வாதாரம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

செங்கம், டிச.25: செங்கம் தாலுகா அலுவலகத்தில் பழங்குடியினர் வாழ்வாதாரம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. செங்கம் தாலுகா அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் தலைமையில் நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியின சமுதாயத்தினரின் வாழ்வாதாரம் குறித்த அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தாசில்தார் முனுசாமி, துணை தாசில்தார் வெங்கடேசன், பிடிஓக்கள் முருகன், ரபியுல்லா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, செங்கம் தாலுகாவில் பல்வேறு பகுதியில் வசித்துவரும் பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர்களின் வாழ்வாதாரம் குறித்தும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக களப்பணி செய்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

Related Stories: