×

சங்கரன்கோவிலில் 477 பயனாளிகளுக்கு ரூ.3.5 கோடி நல உதவிகள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் வழங்கினார்

சங்கரன்கோவில், டிச. 25: சங்கரன்கோவிலில் 477 பயனாளிகளுக்கு ரூ.3.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.  சங்கரன்கோவிலில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் கோபால் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர்கள் (தெற்கு) சிவபத்மநாதன், (வடக்கு) செல்லத்துரை தனுஷ் எம்.குமார் எம்பி, ராஜா எம்எல்ஏ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். ஆர்டிஓ அஸ்ரத்பேகம் வரவேற்றார்.

இதில் முதியோர் உதவித்தொகை, வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை, ஆதரவற்றவர்களுக்கு உதவித்தொகை, தோட்டக்கலை மூலம் விவசாயிகளுக்கு நிவாரணம், பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பில் அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் என 477 பயனாளிகளுக்கு ரூ.3.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, வெற்றிவிஜயன், கடற்கரை, கிறிஸ்டோபர், பெரியதுரை, நகர செயலாளர் சங்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் மதிமாரிமுத்து, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சோம செல்வபாண்டியன், மாவட்ட நெசவாளரணி சங்கை சரவணன், பஞ். தலைவர்கள் தேவசேனாநெல்சன், தினேஷ், சரவணப்பெருமாள், மகேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன்,  மாவட்ட வர்த்தக அணி முனியசாமி, செல்வக்குமார், சுற்றுச்சூழல் அணி அழகுத்துரை, செல்வகுமார், வக்கீல்கள் அன்புச்செல்வன், கண்ணன், சதீஷ், ஜெயக்குமார், மாவட்ட மாணவரணி கார்த்தி, உதயகுமார், அப்பாஸ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மாரியப்பன், வார்டு பிரதிநிதிகள் துரைப்பாண்டியன், செய்யதுஅலி மற்றும்  காவல்கிளி, சங்கர், பாரதிராஜா, வீரக்குமார், பிரகாஷ், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,KKSSRR ,Sankarankoil ,
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...