×

நெல்லை, தென்காசியில் கிறிஸ்துமஸ் விழா

வள்ளியூர், டிச. 25: வள்ளியூர் அருகே சமூகரெங்கபுரத்தில் உள்ள டிடிஎன் குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். ராதாபுரம் பங்குத்தந்தை ராபின் ஆரம்ப ஜெபம் செய்து  கிறிஸ்துபிறப்பு செய்தி அளித்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு, இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கிறிஸ்து பிறப்பு  குறித்த செய்தியை மாணவ, மாணவிகள் நாடகமாக அரங்கேற்றினர். கல்லூரி முதல்வர் சுரேஷ்  தங்கராஜ் தாம்சன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, நேஷனல் பப்ளிக் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். பள்ளியின் பாடகர் குழுவின் இசையோடு நிகழ்ச்சி துவங்கியது. மெட்ரிக் பள்ளியில் 5 முதல் 7ம் வகுப்பு மாணவர்கள் பிரித்தா ஷேரன், வினோ ரெக்லின், கேத்ரின் பெமினா, பியர்லிக் கிரேஷியா ஆகியோர் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் நடனம் ஆடினர். 9ம் வகுப்பு மாணவர் ஜெபின் கோல்டு கீபோர்டு வாசிக்க மாணவர்கள் ரோஷன் தர்சிஸ் ராஜா, ஜெரோம் சாமுவேல், ஜெப்ரின், அருண் எட்வின் ஆகியோர் இயேசு பிறப்பால் மகிழ்ச்சி பாடல்கள் பாடினர்.

மாணவர்கள் செல்வசோபியா, ஜெரின், செல்சி புஷ்பா, ஜெப ஷேரன், சோபியா, சைரஸ் ஆகியோர் நாடகம் நடித்துக் காட்டினர். நேஷனல் பப்ளிக் பள்ளி 6ம் வகுப்பு மாணவிகள் சிவானி, வேனு, மகா, அஸ்மிதா, நவிசா, கனிசியா, சரண்யா, தனுசிகா ஆகியோர் கிறிஸ்துவ ஆங்கில பாடல்கள் பாடினர். இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய பாடலை மாணவ, மாணவிகள் ரபேல், நிஷாந்த்ராஜ், கேத்ரின் ெமர்சி, பெர்னிஷா ஆகியோர் பாடினர். மாணவர்கள் கிதியோன்ராஜ், டேனிஸ், ஜோன்சி, ரிஸோன், ஹேம்லின் அண்டோ, கெவின், மறுரூப அண்ட்ரூஸ் ஆகியோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாணவர்களை மகிழ்வித்தனர். ஏற்பாடுகளை துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், உதவி துணை முதல்வர் பாகீரதி, ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

சுரண்டையில் நல்லசமாரியன் கிளப் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சுரண்டை தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கிருபாகரன், புரவலர் ஜேக்கப், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் அன்னப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெவரண்ட் ஞானபால் ஜெபித்து துவக்கி வைத்தார். பொருளாளர் ஜேம்ஸ் அழகுராஜா வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி மாவட்ட காங். தலைவர் பழனிநாடார் எம்எல்ஏ, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களை கவுரவித்து கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கினார். சுரண்டை நகராட்சி ஆணையாளர் லெனின், ஆர்சி ஆலய பங்குத்தந்தை லாரன்ஸ், சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ், டாக்டர் முருகையா, டாக்டர் அருள்ஜோதி, நகர காங். தலைவர் ஜெயபால், சமுத்திரம், புதுச்சுரண்டை சபை ஊழியர் ஜான், சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், ராஜேந்திரகுமார், கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் ராஜன், தவமணி சொக்கையா, பூமணி, பொன்ராஜ்,  அருள்ராஜ், அசரியா, ரூஸ்வெல்ட், எஸ்ரா, செல்வகுமார், ஆபிரகாம் உள்பட பலர் பங்கேற்றனர்.

அடையகருங்குளத்தில் அன்னை ஜோதி சேவா டிரஸ்ட் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் பாக்கியநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அருட்தந்தை இசிதோர் வாழ்த்திப் பேசினர். அன்னை ஜோதி சிறப்பு பள்ளி நிர்வாகி ஜெயபிரகாஷ் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

சிவகிரி அருகே தேவிப்பட்டினம் ஸ்டெல்லா மேரீஸ் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஸ்டெல்லா மேரீஸ் பிஎட் கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா, பிஎட் கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்வியியல் கல்லூரி தலைவர் சொர்ணம் ராஜாசிங் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் சேர்மன் ஐன்ஸ்டீன் குருபாதம் முன்னிலை வகித்தார். பிஎட் கல்லூரி முதல்வர் நல்லசிவன் வரவேற்றார். பிஎட் மாணவ ஆசிரியை அகிலா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவ - மாணவிகள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மலைக்கொடி, பிரதீபா, ஞானகுரு, ரஞ்சிதம், சாந்தி, ஷீலா, மகேஷ்வரி, வளர்மதி, புனிதா எலிசபெத், ஜெயக்குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோமதி ஈஸ்வரி நன்றி கூறினார்.

Tags : Christmas ,Nellai, ,Tenkasi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...