பெரியார் நினைவு தினம்

கடலூர், டிச. 25: கடலூரில் திமுக சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடலூர் அண்ணா  மேம்பாலம் அருகே  உள்ள பெரியார் சிலைக்கு ஐயப்பன் எம்.எல்.ஏ தலைமையிலும், முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, நகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர். இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், நிர்வாகிகள் ரங்கநாதன், மகிளரணி எல்சா, இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் பரமமூர்த்தி, நகர செயலாளர் ஐயப்பன், ஒன்றிய செயலாளர் லெனின், சிவராமன் முன்னிலையில் மாலை அமைக்கப்பட்டது. திராவிடர் கழகம்  சார்பில் மாநில பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

Related Stories: