×

செல்லியம்மன் கோயிலில் நிகும்பலா யாகம்

நெல்லிக்குப்பம், டிச. 25: நெல்லிக்குப்பம் வான்பாக்கம் செல்லும் சாலையில் செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 7 சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. வராஹி அம்மனை தேய்பிறை பஞ்சமி திதி நாளில் வணங்கினால் திருமண தடை நீங்கும், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம். தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு செல்லியம்மன் மற்றும் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் வராஹி அம்மனுக்கு சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டு மிளகாய் கொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. தொடர்ந்து மகாதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமச்சந்திரன் அய்யர் சிறப்பு பூஜைகள் செய்தார்.

Tags : Nikumbala Yagya ,Celliyamman Temple ,
× RELATED கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு...