எம்ஜிஆர் நினைவு தினம்

கடலூர், டிச. 25:  கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சேவல் குமார், மீனவர் அணி செயலாளர் தங்கமணி, பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சமூகஇடைவெளி இன்றி குவிந்த அதிமுகவினர்: எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு, குறிஞ்சிப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் கடைவீதியில் உள்ள  காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஊர்வலமாக சென்று சிதம்பரம் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 20 நிமிடங்களுக்கு மேல், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கட்சியினர்  சமூகஇடைவெளி இன்றி, முகக்கவசம் அணியாமல் அதிக அளவு கூட்டம் கூடியதால் நோய் அதிகரிக்கும் அபாயம்  ஏற்பட்டுள்ளது.

Related Stories: