எம்ஆர்கே கல்லூரியில் சிறப்பு கருத்துரையரங்கம்

காட்டுமன்னார்கோவில், டிச. 25:  காட்டுமன்னார்கோவில் அருகில் பழஞ்சநல்லூரில் உள்ள எம்ஆர்கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் சிறப்பு கருத்துரையரங்கம் வணிகவியல் கல்வியின் வழி தொழில் வளர்ச்சி\” என்னும் தலைப்பில் நடைபெற்றது. எம்.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் எம்.ஆர்.தெய்வசிகாமணி முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் பழனிவேலு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் பத்மநாபன் கலந்து கொண்டு வணிகவியல் துறை மற்றும் வணிக நிர்வாகவியல் துறை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்பு குறித்து கருத்துகளை வழங்கினார்.

வணிகவியல் துறை தலைவர் திருநாவுக்கரசு வரவேற்புரை வழங்கினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ராம்சன் நன்றியுரை வழங்கினார். பேராசிரியர் பிரகாஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பேராசிரியர்கள் பயன்பெற்றனர்.

Related Stories: