பணபலன்கள் பெற்றுதருவதாக தூய்மை பணியாளர்களிடம் பண மோசடி கல்வி அலுவலக ஊழியர் மீது எஸ்பியிடம் புகார்்

நாகர்கோவில், டிச. 24: குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள  பட்டர்குளம் காலனி பகுதியை சேர்ந்த பாப்பா உள்பட 7 பேர், குமரி  மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி ஓய்வு  பெற்றவர்கள் ஆவர். மாதம் ₹105 சம்பளத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி  உள்ளனர். இவர்கள் 7 பேருக்கும், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் பண  பலன்கள் வழங்கவில்லை என்றும், இது தொடர்பாக உயர்நீதி மன்ற மதுரை கிளையில்  மனு தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றமும் இவர்களுக்கான பண பலன்களை வழங்க  உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்று அவர்கள்  குற்றச்சாட்டு கூறி பல கட்டப்போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் தமிழரசி, தேவி, நூர்ஜகான், தாயம்மாள், வள்ளி, வள்ளியம்மாள் ஆகியோர் நேற்று எஸ்பியிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  பள்ளிகளில் தூய்மை பணியில் நாங்கள் ஈடுபட்டு வந்தோம். எங்களுக்கு அரசாணைபடி சம்பளம் வழங்கப்படவில்ைல. இந்நிலையில் எங்களுக்கு பணி வரன்முறை செய்து தருவதாக கூறி எங்களிடம் நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் தலா Y10 ஆயிரம் வீதம் Y60 ஆயிரம் வாங்கினார். நாங்களும் கொடுத்தோம். உயர்நீதிமன்றத்தில் பணிவரன்முறை செய்வதற்கு உத்தரவும் கிடைத்தது. உத்தரவை தொடர்ந்து எங்களது கல்வி சான்றிதழையும், நியமன ஆணையையும் பள்ளி கல்வி ஆணையருக்கு அனுப்பியதாக கூறி ஏமாற்றி வருகிறார்.

 நவம்பர் மாதம் கேட்டபோது ஒரு வாரத்தில் பணிவரன்முறை செய்து தருவதாக சொல்லி காலம் கடத்தி வருகிறார். எனவே அந்த அதிகாரியிடம் இருந்து எங்களது பணம், மாற்றுச்சான்றிதழ், பணிநியமன ஆணையையும் பெற்றுதரநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: