2வது நாளாக சிவகாசியில் தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றம்

சிவகாசி, டிச. 24: சிவகாசியில் 2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சிவகாசியில் பல்வேறு பகுதியில் சாலையின் இருபுறமும் கடைகளின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். இந்த நிலையில் சிவகாசி அருகே சாட்சியாபுரம் முதல் ஹவுசிங் போர்டு வரை இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நேற்றுமன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. ரிசர்வ்லைன் முதல் ஈஞ்சார்விலக்குவரை 2 வது நாளாக நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாதபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இப்பணியை தாசில்தார் ராஜகுமார், வருவாய் ஆய்வாளர் சேரலாதன், நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் அழகேந்திரன் பார்வையிட்டனர்.

Related Stories: