ஆதியூர் கிராமத்தில் கணினி பட்டா திருத்த முகாம்

திருவாடானை,டிச.24: திருவாடானை அருகேயுள்ள ஆதியூர் கிராமத்தில் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்தது.  தமிழக அரசின் சிறப்பு உத்தரவின் கீழ் கணினி பட்டாவில் உள்ள பெயர் மாற்றம் எழுத்துப்பிழைகள் போன்ற தவறுகளை சரி செய்யும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கணினி பட்டா சிறப்பு திருத்த முகாம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாடானை தாலுகாவில் கணினி பட்டா சிறப்பு திருத்த முகாம் ஒவ்வொரு வருவாய் கிராமம் வாரியாக நடந்து வருகிறது.

நேற்று திருவாடானை பிர்கா ஆதியூர் குரூப்பில் இம்முகாம் நடந்தது. தாசில்தார் செந்தில் வேல்முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராம் கண்ணாத்தாள் முன்னிலை வகித்தார். இம்முகாமில் மொத்தம் 27 மனுக்கள் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. இதில் 8 மனுக்களுக்கு உடனடியாக உத்தரவு வழங்கப்பட்டது. மற்ற மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது. இம்முகாமில் 8 பேருக்கு முதியோர் உதவித்தொகை உத்தரவு வழங்கப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன், கிராம நிர்வாக அலுவலர் பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: