கொட்டாம்பட்டி அருகே அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் புகார்

மேலூர், டிச. 24: கொட்டாம்பட்டி அருகே ஆதிதிராவிடர் காலனியில் வீடுகளின் சேதம் குறித்து அதிமுக ஆட்சியில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கொட்டாம்பட்டி ஒன்றியம், சேக்கிபட்டி ஆதிதிராவிடர்கள் காலனியில் 300 வீடுகள் உள்ளது. 40 வருடங்களுக்கு முன்பு அப்போதையை அமைச்சர் கக்கன் காலத்தில் 72 வீடுகளும், 1996ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 40 தொகுப்பு வீடுகளும் கட்டி தரப்பட்டது. அதன்பின் இதுவரை வீடுகளில் எந்த பராமரிப்பு பணியும் செய்யவில்லை. இதனால் அனைத்து வீடுகளின் மேற்கூரை, பக்கவாட்டு சேதமடைந்து காணப்படுகிறது. தற்போதைய தொடர் மழையால் வீடுகள் திடீர் திடீரென இடிந்து விழுவதால, அங்குள்ள மக்கள் வீட்டை காலி செய்து விட்டு, அருகில் குடிசை அமைத்து தங்கி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்த போது பலமுறை கோரிக்கை விடுத்தும் ஆதிதிராவிடர் காலனி கண்டு கொள்ளப்படவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரை கலெக்டர் அனீஸ் சேகர் இந்த ஆதி திராவிடர் காலனியை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசே புதிய வீடுகளை கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி உடனே புதிய வீடுகள் கட்டித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இன்றைய நிகழ்ச்சி

பொது: தேங்காய் ஓட்டினால் பொருட்கள் தயாரித்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி, துவரிமான் சமுதாய கூடம், காலை 10 மணி, சிறப்பு விருந்தினர்கள் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவன பொதுமேலாளர் பழனிவேல் முருகன், வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன், ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் ஜெயபிரகாஷ்.

Related Stories: