×

உசிலம்பட்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ₹7 லட்சம் மோசடி எஸ்பியிடம் புகார்

உசிலம்பட்டி, டிச. 24: உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை சேர்ந்தவர் பிரியங்கா. இவரை அருகேயுள்ள மூணான்டிபட்டியை சேர்ந்த ரஞ்சித் என்ற காசி என்பவர் அணுகி, தான் வருவாய் துறையில் பணியாற்றி வருவதாகவும், அங்கன்வாடி பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி ரூ.3 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதேபோல் பிரியாவின் தம்பியான முத்துக்குமாருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் ஓஏ (கிளார்க்) வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.7 லட்சம் வரை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அரசு முத்துரையுடன், கலெக்டர், துணை கலெக்டர் கையொப்பம் இட்டது போல் ஒரு பணிநியமன ஆணை வழங்கியதாக தெரிகிறது.

இந்த ஆணையை கொண்டு வேலைக்கு சென்ற போதுதான் அவை போலியானது என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரியங்கா, முத்துக்குமார் இதுகுறித்து மூணான்பட்டியில் உள்ள ரஞ்சித் வீட்டிற்கு சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இம்மோசடி குறித்து பிரியங்கா, முத்துக்குமார் நேற்று உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லுவிவிடம் புகார் மனு அளித்தனர். எஸ்பி உத்தரவையடுத்து புகார் மனு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : SP ,Usilampatti ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்