×

ஒட்டன்சத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றையானை

ஒட்டன்சத்திரம், டிச. 24:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், வண்டிப்பாதை, புலிக்குத்திக்காடு உள்பட பல்வேறு மலைக்கிராமங்களில் காட்டுயானை, சிறுத்தைப்புலி, மான், காட்டு எருமை,  குரங்கு, செந்நாய், மலைப்பாம்புகள் உள்பட ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பரப்பலாறு அணை மற்றும் பாச்சலூர், சோழியப்பாறை எஸ்டேட் மற்றும் மயிலாடும்பாறை பகுதிகளில் ஒற்றை யானை மிரட்டி அச்சுறுத்தி வருகிறது.

மாவட்ட வன அலுவலர் பிரபு ஆலோசனையின் பேரில் வனச்சரகர் செந்தில் தலைமையிலான வனத்துறையினர் யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.எனவே, பொதுமக்கள் தேவையின்றி இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என்றும், தங்கள் தேவைகளை பகல் நேரங்களில் பூர்த்தி செய்துகொண்டு, இரவு நேரத்தில் வீட்டிலேயே இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Ottanchattiram ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே டச்சு நாணயம் கண்டெடுப்பு