×

பாதயாத்திரை பக்தர்களுக்காக பழநி மலைக்கோயிலில் கணபதி ஹோமம்

பழநி, டிச.24: பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி பழநி மலைக்கோயில் ஆனந்த விநாயகர் சன்னதியில் கணபதி ஹோமம் நடந்தது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில்.  இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். இவ்விழா வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி துவங்குகிறது. எனினும், தற்போதே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்களின் நலன் வேண்டி நேற்று மலைக்கோயில் ஆனந்த விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம் நடந்தது.

ஆனந்த விநாயகர் சந்நிதியில் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசங்களை வைத்து சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட தீர்த்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 16 வகை அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் அதிகாரிகள், உபயதாரர்கள் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பழநி கோயில் அர்ச்சக ஸ்தானீகர் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பூஜைகளை மேற்கொண்டனர்.

Tags : Ganapati ,Palani Hill Temple ,Pathayathri ,
× RELATED ஒன்றிய அரசின் 18% ஜிஎஸ்டி, 20%...