×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி அலுவலர்களுக்கு பயிற்சி

கோவை, டிச. 24: கோவை மாநகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, தேர்தல் நடத்துவதற்குரிய பயிற்சி முகாம், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘’எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், உதவி தேர்தல் அலுவலர்களாகவும்,  பொறுப்பு அலுவலர்களாகவும் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையத்தின் புத்தகம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மன்றங்களுக்கான தேர்தல் விதிகள் 2006 ஆகியவற்றில் உள்ள வழிமுறைகளின்படி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை கமிஷனர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா, மாநகர பொறியாளர் ராமசாமி (பொறுப்பு), மாமன்ற செயலாளர் அமல்ராஜ் மற்றும் அனைத்து மண்டல உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Election Corporation ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற...