×

இளங்கோவன் பிறந்தநாள் விழா பெண்களுக்கு இலவச சேலை

ஈரோடு, டிச.24: முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்தநாள் விழா ஈரோடு மாநகர் மாவட்ட 3ம் மண்டல காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. 3ம் மண்டல காங்கிரஸ் தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி.எம்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவரும், நாஸ் இண்டியன் ஆட்டோ கேஸ் ஏஜென்ஸி உரிமையாளருமான ஜெ.சுரேஷ் கலந்து கொண்டு கேக் வெட்டினார். மேலும், 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக சேலைகளை அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஈ.ஆர்.எஸ்.பிரகாஷ், மனித உரிமை துறை தலைவர் வினோத் மாரியப்பா, மண்டல காங்கிரஸ் தலைவர் விஜய பாஸ்கர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் செல்வம், அரவிந்தராஜ் பொதுச்செயலாளர்கள் வி.கே.சச்சிதானந்தம், கண்ணப்பன், நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் கண்ணா, முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, மாவட்ட செயலாளர் பிரகாஷ், டிட்டோ தம்பி, கார்த்தி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கார்த்தி ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் செந்தில் ராஜா, தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சந்தானபாரதி, கருக்குவேல் லோகு, ஹரி, மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ilangovan ,
× RELATED மோடியின் கொத்தடிமையாக செயல்படும்...