×

திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி பழுது

சத்தியமங்கலம், டிச.24:  திம்பம் மலைப்பாதை வளைவில் கண்டெய்னர் லாரி பழுதானதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.  இம்மலைப்பாதை வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி திம்பம் மலைப்பாதை 9 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது பழுதாகி நகர முடியாமல் நின்றது.

இதனால் மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பழுதாகி நின்ற கண்டெய்னர் லாரியை கிரேன் மூலம் நகர்த்தி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.  லாரி பழுதானதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Thimphu Hill ,
× RELATED திம்பம் மலைப்பாதையில் இரவுநேர...