சீர்காழி ஒன்றியத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து தகவல் அளிக்க வேண்டும்

சீர்காழி, டிச.24: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம், தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையில் நடந்தது. பிடிஓக்கள் இளங்கோவன், அருள்மொழி முன்னிலை வைத்தனர். துணைத்தலைவர் உஷா நந்தினிபிரபாகரன் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர் துர்காமதி பேசுகையில், கொண்டல் வள்ளுவக்குடி மருதங்குடி ஊராட்சிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தரவேண்டும் என்றார் கவுன்சிலர் விசாகர் பேசுகையில், சட்டநாதபுரம் ஊராட்சியில் சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் தர வேண்டும் என்றார். தொடர்ந்து கவுன்சிலர்கள் தென்னரசு, அறிவழகன், பச்சு குமார், நடராஜன், ரிமா ஆகியோர் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் பேசுகையில், சீர்காழி ஒன்றியத்தில் பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்திருந்தால் உடனே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கவுன்சிலர்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலாளர் சுமதி நன்றி கூறினார்.

Related Stories: