கீழப்பிடாகை கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

கீழ்வேளூர், டிச.24: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கீழப்பிடாகை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார வேளாண்மை விற்பனைக் குழு தலைவர் தாமஸ்ஆல்வா எடிசன் தலைமை வகித்தார். கீழப்பிடாகை ஊராட்சி தலைவர் வேதநாயகி வரவேற்றார். கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் கால்நடை மருத்துவர் நெல்சன்ஜெயக்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் பசுக்களுக்கு செயற்கைமுறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, கான்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடல்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளக் கழிச்சல் தடுப்பூசி மற்றும் ஆடு, மாடுகளுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் கீழப்பிடாகை ஊராட்சி துணை தலைவர் கமலஹாசன், கால்நடை ஆய்வாளர் சீத்தாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: