உடையார்பாளையத்தில் உலக சித்தர் தினம் கொண்டாட்டம்

ஜெயங்கொண்டம், டிச.24: ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் அரசு மருத்துவமனை சார்பில் உலக சித்தர் தினவிழா கொண்டாடப்பட்டது. உடையார்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவ பிரிவு, மற்றும் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி இணைந்து உலக சித்தர் தினம், அகத்தியர் பிறந்த நாள் மற்றும் சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு எம்ஆர் கல்லூரியின் தாளாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். கல்லூரிகளின் இயக்குநர் ராஜமாணிகக்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியையொட்டி அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ கண்காட்சியை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் திறந்து வைத்து பேசினார். இக்கருத்தரங்கத்தில் கல்லூரியின் முதல்வர் முனைவர் மதியழகன் வரவேற்று பேசினார். உடையார்பாளையம் அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் மற்றும் சித்த மருத்துவர்கள் சையத்கரீம், மருத்துவர் செந்தில்நாதன், ஜெயங்கொண்டம், மருத்துவர் கனிமொழி (குமிழியம்), மருத்துவர் ஷர்மிளா (குழுமூர்), மருத்துவர் மங்கையர்கரசி (பொன்பரப்பி), மருத்துவர் ரேவதி (இரும்புலிகுறிச்சி) ஆகியோர் கலந்து கொண்டு சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதன் மகத்துவம் பற்றியும் டெங்கு, கொரோனா பற்றியும் அதிலிருந்து விடுபடுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்புரையாற்றினர். மருந்தாளுநர் அருள்மொழி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குநர் சசிக்குமார் நன்றி கூறினார்.

Related Stories: