கும்பகோணத்தில் இன்று எம்எல்ஏ அன்பழகன் பிறந்தநாள் விழா

கும்பகோணம்,டிச.24: கும்பகோணம் எம்எல்ஏவும், கும்பகோணம் அன்பு மருத்துவமனை நிறுவனருமான சாக்கோட்டை அன்பழகன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (23ம்தேதி) காலை 6 மணியளவில் சாக்கோட்டையில் அமைந்துள்ள தனது பெற்றோர்கள் நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், கும்பகோணம் மேம்பாலம் அருகில் உள்ள வி.சின்னத்தம்பி, கே.கே.நீலமேகம் ஆகியோரது சிலைகள், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை, மகாமகக்குளம் மற்றும் தாராசுரம் அருகே உள்ள அண்ணா சிலைகள் ஆகியவற்றிக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கோசி.மணி இல்லத்திற்கு சென்று மலர் அஞ்சலி மற்றும் முன்னாள் குடந்தை நகர கழக செயலாளர்கள் சு.பத்மநாபன், இரா.துரை ஆகியோரது நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்துதல். காலை 10 மணியளவில், கும்பகோணம் ரோட்டரி சங்கம் மற்றும் கும்பகோணம் அன்பு மருத்துவமனை சார்பாக, மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, கும்பகோணம் ஹோலி ஏஞ்சல்ஸ் ஆதரவற்றோர் இல்லம், தில்லையம்பூர் முதியோர் காப்பகம், திருவலஞ்சுழி ஜெகன்நாதர் முதியோர் காப்பகம், கொட்டையூர் வள்ளலார் நினைவு இல்லம், மேலக்காவேரி கருணை இல்லம், முத்துப்பிள்ளை மண்டபம் தூய இருதய ஆண்டவர் மருத்துவமனை மற்றும் சாக்கோட்டை மாதா ஊனமுற்றோர் பள்ளி ஆகிய இடங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது. பின்னர், சாக்கோட்டையில் எம்எல்ஏ அன்பழகன் இல்லத்தில் பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கட்சி தொண்டர்களோடு பிறந்த நாள் விழாவை கொண்டாடி விருந்து உபசரிப்பு நடக்கிறது.

Related Stories: