×

கோட்டூர் அரசு பெண்கள் பள்ளியில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு

மன்னார்குடி, டிச. 24: தமிழக பள்ளிக் கல்வித்துறை இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு களை நடத்த உள்ள தன்னார்வலர்களை தேர்வு செய்து பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் தேர்வு பெற்றுள்ள தன்னார்வலர் களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்பி ரமணியன் தலைமையில் கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் குமரேசன், மாவட்ட ஒருங்கிணை ப்பா ளர்கள் தங்கபாபு, முரளி, பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சியைப் பார்வையிட்டு ஒருங்கிணை ந்த கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், தன்னார்வலர்களாகிய நீங்கள் குழந்தைகளிடம் ஒரு உறவுகளாக மாறி நீங்கள் மகிழ்ச்சியுடன் கற்பித்தால் நீங்கள் எதிர்பார்க்கும் கற்றல் விளைவுகள் நிச்சயம் கிடைக்கும் என்றார். இதில் மாநில கருத்தாளர் பாரத்ராஜ், ஆசிரியர் பயிற்றுநர்கள் , ஒன்றிய கருத்தாளர்கள் ஆகியோர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாட்டினை ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Kottur Government Girls School ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு