×

நெல்லை சாப்டர் பள்ளியில் 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் கைதான பள்ளி ஹெச்எம், தாளாளர் ஒப்பந்ததாரருக்கு ஜாமீன்

நெல்லை, டிச. 24:  நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியை, தாளாளர், ஒப்பந்ததாரர் ஆகிய மூவருக்கும் நெல்லை கோர்ட் நேற்று ஜாமீன் வழங்கியது. நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் கடந்த 17ம் தேதி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர். 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பள்ளி இழுத்து மூடப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் ெதாடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பள்ளித் தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி, பள்ளித் தாளாளர் ஆர்பிகே. செல்வகுமார், கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதையடுத்து கைதான 3 பேரும் நெல்லை கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி (பொ) தீபா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வாரத்தில் (திங்கள், புதன், வெள்ளி) ஆகிய 3 நாட்கள் ஜேஎம்4 கோர்ட்டில் மாலை 5 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை 3 பேருக்கும் விதிக்கப்பட்டுள்ளது.

Tags : HM ,Nellai ,Chapter School ,
× RELATED ஊட்டி காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ காலமானார்