×

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன்

தூத்துக்குடி, டிச.24:தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் கடன் வழங்குவதற்கு நடப்பு ஆண்டு குறியீடாக ரூ.190 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக இதுவரை 14,246 விவசாயிகளுக்கு ரூ.125.27 கோடி அளவிற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக விவசாய கடன் பெறும் விவசாயிகள் கடன் தொகையினை உரிய தவணை தேதிக்குள் திருப்பி செலுத்தும்பட்சத்தில் வட்டி வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மானாவாரி பயிர்களுக்கான பருவகாலம் நவம்பர் 2021-உடன் முடிவடைந்த நிலையிலும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அவற்றின் பருவகாலம் டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலநீட்டிப்பு டிசம்பர் 2021 உடன் முடிவடையவுள்ளதால் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவசாயிகள் ரூ.1,60,000 வரையிலும் பெறும் கடன்களுக்கு நபர் ஜாமீன் அடிப்படையிலும் ரூ.1,60,000க்கு மேல் பெறும் கடன்களுக்கு சங்கத்தின் பெயரில் அடமானம் வழங்கியும் பயிர்கடன் பெற்றுக் கொள்ளலாம். விவசாய கடன் பெறாத விவசாயிகள் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர்கடன் பெற்றும், உறுப்பினராக சேராதவர்கள் அருகாமையுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags : Primary Agricultural Co-operative Societies ,Thoothukudi District ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...