×

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கிறிஸ்துமஸ் விழா பேராயர் தேவசகாயம் பங்கேற்பு

நாசரேத், டிச.24:நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கீதவிழா, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா என இருபெரும் விழா நடந்தது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமை வகித்து கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார். கல்லூரிச் செயலர் எஸ்.டி.கே.ராஜன் முன்னிலை வகித்தார். கிறிஸ்துமஸ் கீதவிழாவில் கிறிஸ்துமஸ் பாடல் பாடினர். துறைத்தலைவர்கள் வேதபாடம் வாசித்தனர். தொடர்ந்து டிலைட் அமைப்பு சார்பில் 106 மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாயும், கிறிஸ்துமஸ் புத்தாடையும் வழங்கப்பட்டன.  

சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்லூரி மாணவியும், பெல் மருத்துவமனையின் தலைமை மருத்துவருமான ஜெயம் ஜுலியட் சிறப்புரைஆற்றினார்.  கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை வாழ்த்தி பேசினார். துணை முதல்வர் பெரியநாயகம் ஜெயராஜ் வரவேற்றார். பாரம்பரிய உணவுத் விற்பனை விழாவில் முதல் இரு இடங்களைப் பிடித்த வணிகவியல், ஆங்கிலத்துறைக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தமிழ்த்துறைத் தலைவர்அந்தோணி செல்வகுமார் தொகுத்து வழங்கினார். இதில் நாசரேத் இன்ஸ்பெக்டர் பட்டாணி, பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். வேதியியல் துறைத்தலைவர் ஜேனட் சில்வியா ஜெபரோஸ் நன்றி கூறினார்.

நாசரேத் புனித  லூக்கா செவிலியர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. தூய யோவான் பேராலய  தலைமைகுரு ஆல்பர்ட் ஜெயசிங் தலைமை வகித்து கிறிஸ்துமஸ் செய்தி கொடுத்து  பரிசுகள் வழங்கினார். கல்லூரி முதல்வர் ஜெயராணி பிரேம்குமார் முன்னிலை  வகித்தார். ஆசிரியை சுவேதா வரவேற்றார். மாணவ- மாணவிகளின் கிறிஸ்துமஸ்  கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசுகள்,  இனிப்பு வழங்கப்பட்டன. இதில் தூய யோவான் பேராலய உதவிகுரு ஜெபஸ்டின்,  உபதேசியார் ஜெபராஜ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள்  பங்கேற்றனர். ஆசிரியை ஜெசுடியாள் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன், முதல்வர் ஜெயராணி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

தூத்துக்குடி:தூத்துக்குடி  ஜோதிநகரில் உள்ள திருச்சிலுவை முத்துக்கள் சிறப்பு பள்ளி சார்பில்  ஹோலிகிராஸ் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. விழாவிற்கு தலைமை  ஆசிரியை இருதயமேரி தலைமை வகித்தார். மேரி வரவேற்றார். காமராஜ் கல்லூரி  பேராசிரியர் தேவராஜ் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்கினார். ஷோபனா  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன்  பள்ளி தலைமையாசிரியை பாத்திமா மற்றும் ஆசிரியைகள், சிறப்பு பள்ளி மாணவியர்,  பெற்றோர் பங்கேற்றனர். சுப்புலட்சுமி நன்றி கூறினார்.
ஆறுமுகநேரி: சாகுபுரம்  கமலாவதி பள்ளியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு பள்ளி முதல்வர் சண்முகானந்தன் தலைமை வகித்தார். மாணவர்களின்  மனநல ஆலோசகர் கணேஷ், அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் முன்னிலை வகித்தனர். துணை  முதல்வர் அனுராதா ராஜா வரவேற்றார். வீரபாண்டியன்பட்டணம் செயின்ட் ஜோசப்  சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் பெர்னாடெட் சிறப்பு விருந்தினராக பங்கேற்று  கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து கூறினார். ஆசிரியை  லெட்சுமிகலா இறைவணக்கம் பாடினார்.

விழாவை முன்னிட்டு இயேசு பிறப்பை பிரைமரி பிரிவு மாணவ  மாணவிகள் நடத்திக் காட்டினர். தலைமையாசிரியர் ஸ்டீபன் பாலாசீர் கிறிஸ்துமஸ்  விழா குறித்து பேசினார். ஆசிரியர் சாமுவேல் எபனேசர் சிறப்பு பாடல்  பாடினார். மழலையர் பிரிவு மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலமாக கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர். கிறிஸ்துமஸ் தாத்தா  கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி இனிப்புகள்  வழங்கினார். மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாகிரதி நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை நிர்மினா மிராண்டா, முத்துக்கனி மற்றும் ஆசிரியைகள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.  

பள்ளித்தாளாளரும், சாத்தான்குளம் வட்டார முதன்மை குருவானவர் ரவிபாலன் தலைமை  வகித்தார். ஹிந்தி ஆசிரியர் கேத்திரின் தொகுத்து வழங்கினார். முதல்வர்  பேட்ரிக் அந்தோணி விஜயன் வரவேற்றார். முன்னாள் தாளாளர் அருட்தந்தை ரூபர்ட்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று  மாணவர்கள்,ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினார். மன்னார்புரம் பங்கு தந்தை எட்வர்ட் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உடற்பயிற்சி ஆசிரியர் பென்சன் நன்றி  கூறினார்.   சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு  கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை மாணவி சுவேதா வரவேற்றார்.நிகழ்ச்சியை மாணவ பேரவைத் தலைவி அருணா சுவீட்லின் தொகுத்து வழங்கினார். கணிதவியல் துறை பேராசிரியர் பிரேசில் கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தமிழ்த்துறை மாணவி இந்துமதி நன்றி கூறினார்.

Tags : Archbishop ,Devasakaya ,Christmas ,Thoothukudi ,
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...