கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்

கடலூர், டிச. 24: கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 5 தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும் இதன்படி இன்று(24ம் தேதி) நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்ய உள்ளனர். இப்பணி காலியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமா (சிவில்/டிராப்ட்மேன்) பட்டப்படிப்பு  படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது என கடலூர் வேலைவாய்ப்பு அலுவலர் அஎகசானலி தெரிவித்துள்ளார்.

Related Stories: