×

வேளாண் அலுவலக கட்டிடம் ஆக்கிரமிப்பு

பண்ருட்டி, டிச. 24: பண்ருட்டி அருகே ஒறையூர்- கரும்பூர் செல்லும் சாலை பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. ஒவ்வொரு விவசாயின் நலன் கருதி வேளாண் சார்ந்த தகவல்களை அறிவிப்பதற்கும், உதவிகள் செய்வதற்கும் வேளாண் உதவி அலுவலர் தங்குவதற்காக குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் மூலம் தினம்தோறும் வேளாண்மை அலுவலர்கள் வந்து வேளாண்மை சார்ந்த தகவல்கள், திட்டங்கள், மானியங்கள் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு தெரிவிப்பதற்கு உதவியாக இருந்தது. நாளடைவில் கட்டிடம் சேதமடைந்ததால் அலுவலர்கள் தங்குவது கிடையாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதே ஊரை சேர்ந்த ஒருவர் குடியிருப்பை ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருகிறார். இதனை காலி செய்யும்படி வேளாண்மைத்துறை மூலம் தெரிவித்தனர்.இதன் பேரில் ஊராட்சி மன்ற நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். ஆனால் எந்தவொரு சூழநிலையிலும் குடியிருப்பை காலி செய்யாமல் தகர ஷெட்டுகள் அமைக்கும் பணியில் ஆக்கிரமிப்புதாரர் ஈடுபட்டு வருகிறார். இதனால் வேளாண்மை அலுவலர்கள் தங்குவதற்கு கூட இடமின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து அண்ணாகிராமம் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் கூறியதாவது இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என கூறினார்.

Tags : Office Building ,
× RELATED நூறாண்டுகளை கடக்கும் பாளை மண்டல...