தேசிய கணித தின விழா

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.23: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ராமானுஜன் கணித மன்றம் கணிதத்துறை சார்பில், தேசிய கணித தின விழா கொண்டாடப்பட்டது. கணிதத்துறை தலைவர் ஐயப்பன் வரவேற்றார். கிருஷ்ணகிரி அரசு கல்லூரி உதவி பேராசிரியர் ஜோதிபாசு, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கணித மேதை ராமானுஜனின் கண்டுபிடிப்புகள், தோற்றங்கள் பற்றி மாணவர்களுக்கு கூறினார். கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் பேசினார். ஆங்கிலத் துறைத்தலைவர் புருஷோத்தமன், வணிகவியல் துறை தலைவர் பசுபதி, கணினி அறிவியல் துறைதலைவர் சங்கீதா வாழ்த்துரை வழங்கினர். கணிதத்துறை பேராசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார்.

Related Stories: