கே.ஆர்.பி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, டிச.23: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று முன்தினம் 340 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதே அளவில் நீடிக்கிறது. இந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், 40.02 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் 455 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 461 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து நேற்று முன்தினம் 257 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று 527 கனஅடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 51.90 அடிக்கு தண்ணீர் உள்ளது.

Related Stories: