சித்த மருத்துவ பெட்டகம் வழங்கும் முகாம்

கம்பம், டிச. 23: சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூட்டு வலிகளுக்கான சித்த மருத்துவ பெட்டகம் வழங்கும் முகாம் நடைபெற்றது.  நமது உணவியல் மாற்றங்கள், நடைப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் சிராஜூதீன் விளக்கி கூறினார்.

இம்முகாமில் சுற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில்,கழுத்து  வலி, முதுகு வலி, இடுப்பு மூட்டு வலி, முதுகுத்தண்டு பிரச்னைகள்,  முழங்கால் மூட்டு தேய்மானம் போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவ பயிற்சி  கற்றுத்தரப்பட்டது. மேலும் பயனாளிகளுக்கு அமுக்கரா சூரணம், குங்கிலிய  மாத்திரை, சிலாசத்து மாத்திரை, வாதமடக்கி மாத்திரை, உளுந்து தைலம்,  குங்கிலிய தைலம், கபசுரக்குடிநீர், நிலவேம்பு கஷாயம் போன்ற மருந்துகள்  இடம்பெற்ற மருத்துவ பெட்டகங்கள்  வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் டாக்டர் யோக பிரதீஷ், மருந்தாளுநர் பசும்பொன், சுகாதார ஆய்வாளர்கள் அமரேசன், சூரியகுமார், சுல்தான், மருத்துவமனைப் பணியாளர்கள் கஜனா, முத்துக்குமார், பாண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: