×

கொடைக்கானல் சிறுமி மர்மச்சாவு கிராமமக்கள் சாலைமறியல் போராட்டம்

கொடைக்கானல், டிச.23: கொடைக்கானல் சிறுமி மர்மச்சாவு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராமமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையில் ஏரிக்கு அருகில் மாணவியின் உறவினர்கள் மற்றும் மேல்மலை கிராமத்தை சேர்ந்த கிராமமக்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். கொடைக்கானல் ஆர்டிஓ டாக்டர் முருகேசன், டிஎஸ்பி சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தி
னர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் செய்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதேபோல் கொடைக்கானல் மூஞ்சிக்கல் மற்றும் ஏரி அருகே போராட்டம் நடத்தியவர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து நடந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொடைக்கானல் ஆர்டிஓ முருகேசன் தெரிவித்தார். இந்நிலையில் 3வது நாளாக கொடைக்கானல் மேல்மலை பகுதியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தை தொடர்கின்றனர்.இதேபோல் சிறுமி மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் திருச்சி ரோடு கல்லறை மேட்டில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.


Tags : Kodaikanal ,Marmachavu ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்