×

ரெட்டியார்சத்திரத்தில் கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

சின்னாளபட்டி, டிச.23: திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் விவசாய கடன் திட்டம் மூலம் ஆடு மற்றும் மாடு, கால்நடை வளர்ப்போர், மீன் வளர்ப்போர், கோழி வளர்ப்போர் உட்பட பல்வேறு பணிகளை செய்யும் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்குவதற்காக கூட்டுறவு சங்க செயலாளர்கள், பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ரெட்டியார்சத்திரத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் சரக துணைப்பதிவாளர் முத்துக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அன்புக்கரசன், ஆவின் பொது மேலாளர் தியானேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் ஆனந்தி வரவேற்று பேசினார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒன்றிய தலைவரும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சிவகுருசாமி பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் வங்கியின் உதவி பொது மேலாளர்கள் செல்வராஜ், சேகர், பால்வள கூட்டுறவு சார்பதிவாளர் விஜயகுமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செல்வக்குமார், கூட்டுறவு சார்பதிவாளர் பிரியதர்சினி, வங்கியின் மேலாளர்கள் குணசேகரன், கண்ணன், கள மேலாளர் தமிழ்க்குமரன், ஆவின் மேலாளர் ஆதிசின்னச்சாமி, சரக மேற்பார்வையாளர்கள் ஆனந்தராஜ், முத்துப்பாண்டி, கண்ணன், பால்வள முதல் நிலை ஆய்வாளர் செந்தில்குமார், ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வங்கி மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.




Tags : Retirement Home ,
× RELATED ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லத்தில் அமைச்சர் திரு.சி.வி. கணேசன் ஆய்வு