திருப்பூர், டிச.23: திருப்பூர் கிழக்கு, வடக்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் நாளை (24ம் தேதி) மாலை 6 மணியளவில் திருப்பூர் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தித் துறை அமைச்சரும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் தலைமையிலும், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொள்கிறார்.
தை பொங்கல் விழா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடத்துவது, மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.