ஊட்டி, டிச. 23: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பல்வேறு குடியிருப்புகள் மற்றும் ஓட்டல்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறையின் போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இது போன்ற சமயங்களில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் அல்லது மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஊட்டியில் உள்ள பல்வேறு ஓட்டல்கள் மற்றும் தனியார் விடுதிகளிலும் தற்போது கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு வருகிறது.