என்எல்சியில் பயிற்சி முடித்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி, டிச. 23: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன், ஐடிஐ பயிற்சி முடித்த தொழிலாளர்கள் என்எல்சி நிறுவனத்தில் வேலை வழங்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் வேலை வழங்க கோரி சுமார் 170க்கும் மேற்பட்ட ஐடிஐ அப்ரண்டீஸ் தொழிலாளர்கள் கையில் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். என்எல்சி நிறுவனத்தில் கடந்த 26 ஆண்டுகளாக பணி ஓய்வு பெற்றவர்களுக்கான காலி பணியிடங்களில் தங்களை கொண்டு நிரப்ப கோரியும், 2018ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தங்களுடைய வேலைவாய்ப்பு சம்பந்தமாக என்எல்சி இந்தியா நிறுவனத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: