கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கடலூர், டிச. 23: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தேர்தல் பணிக்குழு செயலாளர், இள புகழேந்தி, கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ, பொறியாளர் அணி செயலாளர், துரை.கி.சரவணன், மாவட்ட துணைசெயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் குணசேகரன், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், கடலூர் நகர செயலாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், தாணூர் சிவக்கொழுந்து, பாலமுருகன், விருத்தாம்பாள் ஞானசேகரன் மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டை தலைவர் ஆணைப்படி மாவட்ட திமுக சார்பில் ஓராண்டு முழுவதும் கொண்டாடுவதுடன், நலத்திட்டங்கள் வழங்கியும், நூலகங்கள் திறந்தும், இளைய தலைமுறைகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்திட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.     மாவட்டம் முழுவதும் திமுக நிர்வாகிகள், அனைத்து கிளைகளிலும் உறுப்பினர்களை சேர்த்திடும் பணியில் தீவிரமாக செயல்பட வேண்டும்.  உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற வாக்குச்சாவடி குழுக்களை அமைத்து முதல்வரின் சாதனைகளை துண்டறிக்கைகளாக வீடு, வீடாக வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.கடலூர் கிழக்கு மாவட்டத்தில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் மனுக்கள் பெறும் முகாம் நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், முகாம் நிகழ்வுகள் வெற்றிகரமாக நடத்திட நிர்வாகிகள், தோழர்கள் பொதுமக்களின் கோரிக்கை விண்ணப்பங்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் குறிப்பிட்ட நேரத்தில், நேரில் அளித்திட வேண்டும், என கூட்டத்தில் கேட்டு கொள்ளப்பட்டது.

Related Stories: