×

என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் ₹76.89 லட்சம் மதிப்பில் சந்தை புனரமைப்பு

நெய்வேலி, டிச. 23: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 4-ல் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் வியாழக்கிழமை வார சந்தை பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த வார சந்தையில், என்எல்சி நகர் பகுதியில் வசிக்கும் என்எல்சி ஊழியர்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள், பலசரக்கு உள்ளிட்ட பெருட்களை வாங்கி வந்தனர். கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு சந்தை மூடப்பட்டது. இதை தொடர்ந்து 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்தையில், என்எல்சி நகர நிர்வாகத்தின் சார்பில் ரூ.76.89 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது புதிய பொலிவுடன் 260 கடைகளை கொண்ட இந்த சந்தையில், வாகன நிறுத்தம், கழிவறை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சந்தையை என்எல்சி மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் திறந்து வைத்தார். என்எல்சி நகர நிர்வாக பொது மேலாளர் முகமது அப்துல் காதர், மக்கள் தொடர்புத்துறை பொதுமேலாளர் சொக்கலிங்கம், துணை பொதுமேலாளர்கள் கனகராஜ், ராமன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : NLC India ,
× RELATED அனல் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க...