நடுக்கடலில் சுருண்டு விழுந்து மீனவர் சாவு

திருச்செந்தூர், டிச.23: திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் நடுக்கடலில் மீனவர் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார். வீரபாண்டியன்பட்டணத்தை சேர்ந்த அருள்சீலனுக்கு சொந்தமான பைபர் படகில் வீரபாண்டியன்பட்டணம் மாதாகோவில் தெருவை சேர்ந்த யேசுதாசன்(37) என்பவர், நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது பெரிய அலையில் அடிபட்டு படகில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், யேசுதாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் கடல் காவல் நிலையம் எஸ்ஐ கோமதிநாயகம் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: